காசா பகுதியில் போர்நிறுத்தம்: பணையக் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஹமாஸ் இணக்கம்

காசா பகுதியில் போர்நிறுத்தம், பணையக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இரண்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தத்தை இறுதி செய்யும் கட்டத்தில் பேச்சுவார்த்தை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எகிப்து அதிகாரி மற்றும் ஹமாஸ் அதிகாரி என இருவர் இந்தத் தகவலினை உறுதி செய்துள்ளனர். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோர் 7-ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உட்பட சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் 250 பேரை பணையக் கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 60,000-க்கும் அதிமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள், பெண்கள் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.