காசாவில் போர்நிறுத்தத்துக்கு எகிப்து அதிபர் அழைப்பு

காசாவில் இரண்டு நாட்கள் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என எகிப்து அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். கெய்ரோவில் நடந்த மாநாட்டில் அவர் இந்த  அழைப்பை விடுத்துள்ளார்.

அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட போர் இது. வரையில் தொடர்கின்றது.  இந்த போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  ஆனால், இன்னும் போரின் உக்கிரம் குறைந்தபாடில்லை. ஹமாஸை அழிக்காமல் ஓயமாட்டோம் என இஸ்ரேல் வீர முழக்கமிட்டு வருகிறது.

இந்த நிலையில் காசாவில் இரண்டு நாட்கள் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என எகிப்து அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும்“காசாவில் இரண்டு நாட்கள் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள முன்மொழிகிறேன். இந்த இரண்டு நாட்களில் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்குப் பதிலாக காசாவில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகள் 4 பேரை விடுவிக்கலாம். அதைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களுக்கு மேலும் சமரசப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கலாம்.” என்றார்.