கலைஞர் டேமியன் சூரியன் நடிக்கும் போதே மேடையில் மரணம்

520 Views

திருமறைக் கலாமன்றத்தின் பிரெஞ்சு கிளையின் தலைவரும், நாடடுக்கூத்துக் கலைஞருமான டேமியன் சூரியன் மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பரிஸ் நகரில் மரணமடைந்த சம்பவம் சக கலைஞர்களையும் மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு இந்தச் சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமறைக் கலாமன்றம் நடத்திய கலைவண்ணம் என்ற நிகழ்வில் இராமாயணத்தை மையப்படுத்திய நாட்டுக்கூத்து ஒன்றில் சக கலைஞர்களுடன் இணைந்து டேமியன் சூரியன் நடித்துக் கொண்டிருந்தார்.

கும்பகர்ணன் பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த இவர், நிகழ்வின் இறுதிக் கட்டத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் தரையில் விழுந்து மரணிக்கும் கட்டத்திற்காக மேடையில் வீழ்ந்தவர் உண்மையிலேயே மேடையில் மரணமடைந்து விட்டார்.

damian2 கலைஞர் டேமியன் சூரியன் நடிக்கும் போதே மேடையில் மரணம்மரணிக்கும் கட்டத்திற்காக உணர்வுபூர்வமாக நடித்தவர் மேடையில் உண்மையிலேயே மரணமடைந்தமை சக கலைஞர்களையும் பார்வையாளர்களையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

Leave a Reply