கற்பிட்டிப் பகுதியில் காணாமல் போன மீனவர் தலைமன்னார் கடற் பரப்பில் மீட்பு

133 Views

கற்பிட்டி கடற்பரப்பில் கடந்த 9 திகதி இரவு  மீன் பிடிக்க சென்ற கற்பிட்டி ஆணவத்தை சேர்ந்த ரூபன் கொஸ்தா (வயது 20) என்ற  மீனவர் கடும் காற்றினால் படகில் இருந்து கடலில் தவறி விழுந்துள்ளார். மீனவர்களினால் தொடர்ந்து  தேடியும் கிடைக்கப்பெறாத நிலையில், குறித்த மீனவர்  தலைமன்னார் தெற்கு கடற்பரப்பில் உயிருடன் கரை ஒதுங்கியுள்ளார்.

இதையடுத்து கடற்படையினர் மற்றும் மீனவர்களால் மீட்கப்பட்டு  தலைமன்னார் வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்டுள்ளார் என்று மன்னார் மீன்பிடி திணைக்கள அதிகாரி திரு. பவநிநி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply