Tamil News
Home செய்திகள் கறுப்பு பூஞ்சை நோய் இலங்கைக்கு புதிதானதல்ல – வைத்திய நிபுணர்ப்ரீமாலி ஜயசேகர

கறுப்பு பூஞ்சை நோய் இலங்கைக்கு புதிதானதல்ல – வைத்திய நிபுணர்ப்ரீமாலி ஜயசேகர

கறுப்பு பூஞ்சை நோயால் இது வரையில் இலங்கையில் 24 பேர் பாதிக்கப்பட்ட போதிலும் அவர்களில் யாரும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என பூஞ்சை நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்ப்ரீமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந் நோய் தொடர்பில் மக்கள் வீண் அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. இதற்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான சகல மருந்துகளும் இலங்கையில் காணப்படுகின்றது.

நி யூகோ மைஸிஸ் னக் கூறப்படும் கறுப்பு பூஞ்சை நோய் இலங்கைக்கு புதிதானதல்ல. இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு இந் நோயால் பாதிக்கப்பட்ட 42 நோயாளர்களும், 2020இல் 24 நோயாளர்களும், இவ்வாண்டில்இதுவரையில் 24 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்” என்றா.

Exit mobile version