கனேடிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளுடன் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

IMG 20240709 WA0015 கனேடிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளுடன் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (CaFFE) மற்றும் கனேடிய உயர் ஸ்தானிகராலய அரசியல் பிரிவு பிரதிநிதிகளுடன் அண்மையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. கணேடிய உயர்ஸ்தானிகராலய இரண்டாவது செயலாளர் (அரசியல்) பேட்ரிக் பிக்கரிங் மற்றும் அரசியல் பிரிவு பொறுப்பாளர் ஜி.சாஹித்யனன் ஆகியோர் இராஜகிரியவில் உள்ள CaFFE தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

தற்போதைய அரசியல் நிலவரம், எதிர்வரவிருக்கும் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைககள், கடந்தகால தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள், மற்றும், வாக்காளர்கள் அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அரசியலில் பெண்கள் பங்கேற்பு போன்றவற்றை உள்ளடக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் CaFFE குழுவுடனான கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார். இந்த கலந்துரையாடலில் CaFFE நிர்வாக பணிப்பாளர் திருமதி.சுரங்கி ஆரியவன்ஷவும் கலந்துகொண்டார்.