கனடா நாட்டின் அமைச்சராக உள்ள ஹரி ஆனந்தசங்கரியை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழு நேற்று வெள்ளக்கிழமை (10) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.
கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோர் இந்த பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான தமிழ் மக்களின் நிலை, தற்போதைய ஆட்சியாளர்களின் அரசியல் போக்கு மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் கனடா அரசாங்கத்திடம் தமிழர்களுடைய எதிர்பார்ப்பு என்பன தொடர்பிலும் இதன் போது ஆழமாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.