கனடாவின் தேர்தலில் இந்தியா தலையிடுவதாக குற்றச்சாட்டு

தனக்கு சார்பான ஆட்சி முறை ஒன்றை கொண்டு வரும் நோக்கத்துடன் கனடாவின் தேர்தலில் இந்தியா அதிக தலையீடுகளை மேற்கொள்வதாகவும், அரசியல்வாதிகளை இந்தியா தனக்கு சார்பாக மாற்ற முற்படு வதாகவும் கனடா முன்வைத்தக் குற்றச்சாட்டுக்களை இந்தியா மறுத்துள்ளது.

முகவர்களின் ஊடாக கனடாவின் அரசியலில் இந்தியா மறை முகமாக தலையிட்டுவருகின்றது. கனடாவில் உள்ள பல அரசியல் வாதிகளுக்கு இந்தியா நிதி உதவிகளை வழங்கி அவர்களை இந்தியாவுக்கு சார்பானவர்களாக மாற்ற முற் பட்டுவருகின்றது என கனடாவின் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவினால் அமைக்கப்பட்ட மரி ஜோசி ஹொக் நீதிபதி தலமையிலான ஆணைக்குழு கடந்த செவ்வாய்க்கிழமை(28) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஸ்யா, ஈரான், சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற  நாடுகளும் தமது தேர்தல் நடைமுறையில் தலையீடுகளை மேற்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கையை தாம் முற் றாக நிராகரிப்பதாகவும் கனடாவிற்குள் குடிவந்துள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகள் மற்றும் குற்றவாளிகளால் தான் கனடாவின் தேர்தல் நடைமுறைகள் பாதிக்கப்படுவதாகவும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கனடாவில் வசித்து வந்த சீக்கிய மதத்தின் தலைவர் ஒருவரை இந்தியாவின் உளவு அமைப்பு படுகொலை செய்ததாக 2023 ஆம் ஆண்டு செப்டம்பர்

 மாதம் கனேடியப் பிரதமர் குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் அதிக விரிசல்கள் ஏற்பட்டிருந்தன.

அதன் பின்னர் அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்பான காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஒருவரை இந்திய புலனாய்வு அமைப்பு படுகொலை செய்ய முற்பட்டதாக கூறி அமெரிக்கா இந்திய பிரஜை ஒருவரை செக் குடியரசில் வைத்து கைது செய்திருந்தது.