கண்ணுக்கு தெரியாத உயிரியலுடன் நடாத்துகின்ற ஒரு உயிரியல் யுத்தமாகும்.

கொரோனா நோய் என்பது கண்ணுக்கு தெரியாத உயிரியலுடன் நடாத்துகின்ற ஒரு உயிரியல் யுத்தமாகும். மனிதகுலம் என்ற அடிப்படையில் ஏற்பட்டுள்ள சவாலை நாங்கள் ஒன்றாக இணைந்து முகம் கொடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் முதலாவதாக கடந்த மாச் 15 திகதி கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டில் இருந்து வந்த கொரோனா தொற்று நோயாளியுடன் நெருங்கி பழிகிய ஓய்வு பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்; வீட்டில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் அவர் குறித்த 14 நாள் காலக்கேடு முடிவுற்ற நிலையில் அவருக்கு நோய் தொற்று இல்லை என சுகாதார அதிகாரிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்

எனது நண்பர் ராஜதுரை லண்டனில் இருந்து வந்த நிலையில் சந்தித்து நெருக்கமாக பழகிய சந்தர்ப்பத்திலே அவருக்கு கடந்த 15-3.2020 கொரோனா தொற்றுக்குள்ளான காரணத்தின் அடிப்படையிலே அன்றில் இருந்து எங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினோம்.

அதேவேளை எங்களுடன் பழகியவர்கள் பயணித்தவர்கள் என்ற அடிப்படையிலே சுமார் 40 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டது

இந்த நிலையில் சுகாதார உத்தியோகத்தர்களின் கண்காணிப்பிலே அவர்களுடைய உடல்நலம் சார்ந்ததாக கவனிக்கப்பட்டது.

அந்த அடிப்படையிலே 29-03-2020 நாங்கள் அவ்வாறான தொற்று எதுவும் இல்லை சுகாதார வைத்தியர் அதிகாரிகள் காரியாலயத்தில் இருந்து கடிதங்கள் கிடைத்தன

இந்த நிலையில் 18 நாட்கள் கடந்து இன்று சந்திப்பதில் மகிழ்சியாகவுள்ளது.

அதேவேளை என்னுடன் பழகியவர்கள் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை எவருக்கும் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்ற செய்தியையும் அறிய முடிந்தது .

அரசாங்கம் தெரிவிக்கும் அறிவுறுத்தலுக்கமைய நாங்கள் தனித்திருந்து ஏனையவர்களையும் எங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.

ஆகவே எங்களுடைய மக்கள் இந்த தருணத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து தனித்திருந்து சமூக இடைவெளியை நாங்கள் பேணி இந்த சவாலில் இருந்து மீண்டெழ வேண்டும்.

எங்களுடைய மாவட்டம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு துன்பங்களை தாங்கிய சமூகமாக இருக்கின்றோம் எனவே இன்று இந்த சவாலுக்கு முகம் கொடுப்பதற்காக அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையிலே சுயமாக சிந்தித்து இணைந்து செயற்படவேண்டும் என்றார்.