Tamil News
Home செய்திகள் கட்சி ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் உட்பட உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை –...

கட்சி ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் உட்பட உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை – கி.துரைராசசிங்கம

கடந்த காலங்களில் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி நடந்தமை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டே பொதுவெளிகளில் கட்சியைப் பிழையாக விமர்சனம் செய்தமை மற்றும் தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்டமை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் இருந்து கொண்டே கட்சிக்கு எதிராகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்  உட்பட உள்ளுராட்சிமன்றங்களின் உறுப்பினர்கள் எழுவர் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்  தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அவர் சார்ந்திருந்த கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அவர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அவர் விலக்கப்பட்ட கையோடு,அவரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான கடிதங்கள் அவருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரின் நடவடிக்கையைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்திற்குப் புதியவர் நியமிக்கப்படுவார்.

இதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளரான பிலிப் பற்றிக் ரோசான் என்பவர் மீது அவர் சார்ந்திருந்த கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தியமைக்கு அமைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அவர் விலக்கப்பட்டதன் பேரில், அவரின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பிலான கடிதங்கள் அவருக்கும்ää உரிய தெரிவத்தாட்சி அலுவலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்திற்குப் புதியவர் நியமிக்கப்படுவார்.

Exit mobile version