Home செய்திகள் ஐ.தே.க.விலிருந்து மேலும் மூவர் இடை நிறுத்த தீர்மானம்

ஐ.தே.க.விலிருந்து மேலும் மூவர் இடை நிறுத்த தீர்மானம்

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக ரஞ்சன் ராமநாயக்கவை விட மேலும் மூவரை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கட்சியின் பிரதித்தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதை அடுத்து இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அந்தவகையில் கட்சியின் மூத்த தலைமை தொடர்பான விமர்சனம் மற்றும் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்திய மூவரை கட்சி அடையாளம் கண்டுகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன்பிரகாரம் ரஞ்சன் ராமநாயக்க போன்றே அவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை கட்சியில் இருந்து இடைநீக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ரவிகருணாநாயக்க குறிப்பிட்டார்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version