கடும் போட்டியில் அமெரிக்க அதிபர் தேர்தல்

622 Views
எதிர்பார்த்ததை விட டொனால்ட் டிரம்ப் அதிக இடங்களில் வெற்றி பெற்று வருவதால் இதுவரை வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் அமெரிக்க அரச தலைவருக்கான தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகின்றது.
இதுவரை வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் குடியரசுக்கட்சியை சேர்ந்த டிரம்ப் 213 ஆசனங்களையும், ஜோ பைடன் 220 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளனர். எனினும் இன்னும் பல இடங்களின் முடிவுகள் வெளிவரவுள்ளன.
இந்த நிலையில் இரு தலைவர்களிலும் ஒருவர் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் வெற்றிவாய்ப்பு யாருக்கு என இப்போது தெரிவிக்க முடியாது.
இதனிடையே, வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் டிரம்ப் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் அவர் தனது குடும்பத்தினருக்கும் மில்லியன் கணக்கான தனது ஆதரவாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
நாம் மிகப்பெரும் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராக வேண்டும், நாம் எல்லாவற்றையும் வெற்றி கொண்டுள்ளோம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply