Tamil News
Home செய்திகள் கடன் மறுசீரமைப்பு – இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் முதல் கூட்டம் இன்று

கடன் மறுசீரமைப்பு – இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் முதல் கூட்டம் இன்று

இலங்கைக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியை இந்தியா ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது என திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரத்னாயக்கவை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையின் நிதி நெருக்கடியின் உச்சக்கட்டத்தின்போது, இந்தியாவால் வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர உதவியின் ஒரு பகுதியான, கடன் எல்லை வசதி கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த கடன் எல்லை வசதியில் சுமார் 350 மில்லியன் மீதமுள்ளன என்றும் அவை தேவைக்கேற்ப பயன்படுத்தப்படலாம்” என்று அவர் கூறியுள்ளார். எனினும், சந்தையில் அந்நிய செலாவணியின் கிடைப்பனவு அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டை விட தேவை அதிகமாக இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

இதுவரை முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்பட்ட வசதியை நீடிக்க இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கடந்த மார்சில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில், தற்போது குறித்த கடன் வசதியை இந்தியா நீடித்துள்ளதாக திறைசேரியின் பிரதி செயலாளர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version