கடந்த ஆண்டில் 8 கோடி பேர் புலம்பெயர்ந்தனர்

கடந்த ஆண்டு உலகளவில் வரலாறு காணாதவாறு 8 கோடி பேர் புலம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

போர் மற்றும் இடர்ப்பாடுகள் காரணமாக 2018ஆம் ஆண்டை  விட 2019ஆம் ஆண்டு 90 இலட்சம் பேர் கூடுதலாக புலம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இது மனித வளத்தில் ஒரு சதவீதம் பேர் இருப்பிடத்தை விட்டு புலம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த பட்டியலில் சிரியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான், தென்சூடான், மியான்மார் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளதாகவும் ஐ.நா. உயர் அதிகாரி பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.

மேலும் மிகப்பெரிய மீள்குடியேற்ற நாடுகளில் அமெரிக்காவை பின்தள்ளி கனடா முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.