கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் கெடுபிடிகளில் ஈடுபட்ட காவல்துறையினர்!

அம்பாறை - திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பலத்த  பாதுகாப்பு மத்தியில் நடைபெற்ற நினைவேந்தல் - ImportMirror - No 1 leading  Tamil ...

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று  (27) மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றன.

இந்த நிலையில், மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அங்கு சென்ற மக்களிடம் காவல்துறையினர்   கெடுபிடிகளை விதித்து அங்கு செல்வதை தடுக்க முயற்பட்டள்ளனர்.

அத்துடன் அங்கு சென்ற வாகனங்களின் இலக்க பலகைகள் பதியப்பட்ட பின்னர் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் காவல்துறையினர்முரண்பட்டதுடன் அங்கு சிறு பதற்ற நிலையும் ஏற்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ளது.அம்பாறை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நினைவுச்சுடர்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள் துயிலும் இல்லத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலிகள் மற்றும் பொது மக்களால் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.