கச்சதீவு பெருந்திருவிழாவிற்கு திகதி தீர்மானிக்கப்பட்டது

01. ‘கச்சதீவு பெருந்திருவிழா எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது’ என்று யாழ் மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

‘இலங்கை மற்றும் இந்திய யாத்திகர்கள் உள்ளிட்ட 9 ஆயிரம் யாத்திரிகர்கள் கச்சதீவு பெருந்திருவிழாவுக்கு வருகை தருவர் என்று எதிர்பார்;க்கப்படுகிறது’ அவர் குறிப்பிட்டுள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான கலந்துரையாடல் இன்று (07) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
‘திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அதேநேரம் பேருந்து போக்குவரத்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’. ‘அதேபோன்று கடல் போக்குவரத்து சேவையை மேற்கொள்ளவுள்ள படகுகளின் தரம் தொடர்பில் கடற்படையினர் ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளன’. ‘அத்துடன் கடற்போக்குவரத்து சேவைக்கான கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது’.

‘குறிப்பாக நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கான ஒரு வழி போக்குவரத்து கட்டடணமாக 1000 ரூபாவும், குறிகாட்டுவன் துறைமுகத்திலிருந்து ஒரு வழி போக்குவரத்து கட்டடணமாக 1300 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று யாழ் மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.