Tamil News
Home உலகச் செய்திகள் ஒப்பந்தத்தில் இருந்து மீறக்கூடாது ; ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐரோப்பிய நாடுகள்

ஒப்பந்தத்தில் இருந்து மீறக்கூடாது ; ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐரோப்பிய நாடுகள்

அனைத்துலக அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் மீறக்கூடாதென பிரித்தானியா பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய முக்கிய ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.அவ்வாறு ஈரான் ஒப்பந்தத்தில் இருந்து மீறினால் இரண்டு தரப்பிற்கும் இடையில் மேலும் முரண்பாடுகள் உருவாகும் எனவும் அவை எச்சரித்துள்ளன.

தடைசெய்யப்பட்ட அணு செறிவூட்டல் தொழில் நுட்பத்தை ஈரான் மீண்டும்பயன்படுத்தி வருவதாக ஐ.நாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்புஅறிவித்ததையடுத்து, தற்போது இடம்பெற்று வரும் ஐ.நா.பொதுச்சபை அமர்வின் போது நியூயோர்க்கில் வைத்து ஈரானுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரானிய அரசாங்கத்தில் உள்ள அனைத்து நிர்வாகஉறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குஅமெரிக்கா தடை விதித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் இந்த முடிவை அமெரிக்க
இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார்.இதற்கிடையே கடந்த யுலை மாதம் 19ஆம் திகதி முதல் ஈரானால் தடுத்து
வைக்கப்பட்ட பிரித்தானிய பதிவு பெற்ற எண்ணெய்த் தாங்கிக் கப்பல்  விடுவிக்கப்பட்டதையடுத்து அது ஈரானிய துறைமுகத்தில் இருந்து துபாயை நோக்கி புறப்பட்டது.

Exit mobile version