ஒன்பது மாகாண சபைகளை மூன்று மாகாண சபைகளாக மாற்ற வேண்டும்; சரத் வீரசேகர யோசனை

291 Views

பண்டைய அரச காலத்தில் இருந்தது போல் உருகுணை, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மூன்று மாகாணங்களை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல நிபுணர்கள் குழுவால் தனக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் தற்போதுள்ள 09 மாகாண சபைகளை மூன்று மாகாண சபைகளாக மாற்ற யோசனை அவரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது மாகாண சபைகள் இருப்பதால், விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனவும், ஆனால், மாகாண சபைகளைத் தொடர்ந்தும் செயற்படவைப்பதற்கான யோசனை எதுவும் இல்லை எனவும் சரத் மேலும் வீரசேகர தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர மாகாண சபைகளை மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் நினைத்தாற்போல் அதனை மாற்ற முடியாது எனக் கூறி முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Leave a Reply