Tamil News
Home செய்திகள் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஸ்ரீலங்காவில் திறக்கப்படுகிறது தந்திரிமலை

ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஸ்ரீலங்காவில் திறக்கப்படுகிறது தந்திரிமலை

வில்பத்து தேசிய சரணாலயத்தின் தந்திரிமலை மற்றும் மஹவிலச்சிய நுழைவாயில் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அமைச்சு, சரணாலயத்தை சூழவுள்ள ஹணுவில, குகுல் கட்டுவ, முசிங்ககம மற்றும் கடுபத்கம ஆகிய 4 வாவிகளும் புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

வில்பத்து சரணாலயத்தில் புதிய பாலமொன்றை நிர்மாணிப்பதற்கும் புதிய வீதிகளை அமைப்பதற்கும் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவினால் ஆலோசனை வழங்கப்படுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version