Tamil News
Home செய்திகள் ஐ.நா.வின் தீர்மானம்: இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது – சர்வதேச மன்னிப்புச்சபை

ஐ.நா.வின் தீர்மானம்: இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது – சர்வதேச மன்னிப்புச்சபை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு, இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் தீர்மானம் வலியுறுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதிப் பிராந்தியப் பணிப்பாளர் தினுஷிகா திஸாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.

இது சரியான திசையில் வரவேற்கத்தக்கபடியாகும் என்றும் ஆனால் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் இருந்து எழுவது உட்பட, பரந்த அளவிலான மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு நிபுணர் பொறிமுறையை நிறுவுவதற்கான சிவில் சமூகத்தின் கோரிக்கைகளுக்கு அந்த சபை பதிலளிக்கத் தவறிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version