சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக தமிழர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை வேண்டாம் என்று ஐ.நா. உள்பட உலகம் முழுவதும் இருந்து வந்த வேண்டுகோள்களை சிங்கப்பூர் அரசு புறந்தள்ளிவிட்டது.
தங்கராஜூ சுப்பையா(46) என்கிற அந்த நபருக்கு சாங்கி சிறைச்சாலையில் புதன்கிழமை அதிகாலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறினர்.
பலவீனமாக சாட்சிகள், விசாரணையின் போது மிகக் குறைந்த சட்ட உதவி ஆகியவற்றைக் கொண்டே அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டதாக மரண தண்டனைக்கு எதிரான ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தங்கராஜுவின் வாழ்க்கை, தூக்கு தண்டனையில் முடிந்தாலும் கூட சிங்கப்பூரின் சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று தங்கராஜுவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
“என் அண்ணனுக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்கலாம். அது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. அதனால் தொடர்ந்து போராடுவேன், என்கிறார் தங்கராஜுவின் சகோதரி லீலா.
“கடைசி வரை அவரை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று குடும்பத்தினர் கூறினர். இது அவர்களுக்கு ஒரு வேதனையான அனுபவம்,” என்று பிபிசியிடம் மரண தண்டனைக்கு எதிரான செயல்பாட்டாளர் கிர்ஸ்டன் ஹான் தெரிவித்தார்.
நன்றி – பிபிசி தமிழ்