ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினராக இந்தியா இணைய ரஷ்யா ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இணைவதற்கு ரஷ்யா ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற RIC காணொளி ஒன்று கூடல் நடைபெற்ற பின்னர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் நிருபர்களிடம் பேசும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக புதிய நாடுகள் வரவேண்டும் என்பதில் இந்தியாவிற்கு வலுவான ஆதரவு உள்ளது. இந்தியா நிரந்தர உறுப்பினராக இணைவதற்கு ரஷ்யா தனது ஆதரவை அளிக்கும் என்று கூறினார்.

கடந்த வாரம் ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தரமில்லா உறுப்பினர் நாடுகளுக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 193 வாக்குகளில் 184 வாக்குகளை பெற்று இந்தியா வெற்றி பெற்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியா 2 வருடங்களுக்கு ஐ.நா. சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தரமில்லா உறுப்பு நாடாக அங்கம் வகிக்கும்.