ஐ.தே.க. செயற்குழு இன்று பரபரப்பாகக் கூடுகின்றது; சர்ச்சைகளுக்கு முடிவு கிடைக்குமா?

190 Views

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று பரபரப்பான சூழ்நிலையில் இடம்பெறவுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 அளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, சமகால அரசியல் நிலைவரம், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய கூட்டணி குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த திங்கட்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இடம் பெற்றது. இதன்போது, கூட்டணியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்கச் செயற்குழுவின் அனுமதி வழங்கியிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply