ஐரோப்பிய ஒன்றியம் ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்துக்கு உதவுகிறதா? 

ஐரோப்பிய ஒன்றிய சிறிலங்காவுக்கான தேர்தல் கண்காணிப்புக்குழு மறு அறிக்கை வெளியிட அதன் குடிகளான ஈழத்தமிழர்கள் போராட வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய சிறிலங்காவுக்கான தேர்தல் கண்காணிப்புக்குழுத் தலைவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் நச்சோ சன்செஸ் ஆமர்  தேர்தல் பரப்புரை மேடைகளில் இனமத பேதங்களை முன்னிலைப்படுத்தி பிரிவினைகளை ஏற்படுத்தக் கூடியவாறான விடயங்கள் பேசப்படாமல் பொருளாதார மீட்சி மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் போன்ற அவசியமான விடயங்களே எதிரொலித்தமை மிகவும் பாராட்டப் பட வேண்டிய விடயம் என பாராட்டியதும் அல்லாமல் இலங்கையின் வரலாற்றிலேயே மிகவும் அமைதியாக நடந்த தேர்தல் என வாய்மொழிச் சான்றிதழும் வழங்கியமைக்குத்  தாயகத்திலும் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் தங்கள் கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

ஏனெனில் ஈழத்தமிழர்கள் இந்தச் சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலும் தேர்தல் முறைமையுமே ஈழத்தமிழர்கள் சுதந்திரமானதும் நீதியாளதுமான முறையில் கருத்துரைக்கவோ ஒன்றுகூடவோ சன நாயக முறையில் எதிர்ப்புக்களைத் தெரிவிக்கவோ முடியாதவாறு அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் சிறிலங்காவின் அரசியலமைப்பின் 6ம் திருத்தத்தின் மூலமும் நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் பயங்கரவாதத் தடைச்சட்டம்  என்பவற்றுடன் கூடிய படைபல நிர்வாகத்தின் மூலம் திட்டமிட்ட முறையில் சிறிலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களால் தடுக்கப்பட்டிருக்கும் நடைமுறை எதார்த்தத்தை வெளிப்படுத்தாது இதனை அமைதியான தேர்தல் என்று நச்சோ சன்செஸ் அறிக்கை செய்வது ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்துக்கு எதிரானதும் அனைத்துலகச் சட்டங்களுக்கு முரண்பாடானதுமான செயல்.

அத்துடன் ஈழத்தமிழர் தாயகத்தில் இந்த இனவெறித்தன்மையாகக் கட்டமைக்கப்பட்டுள்ள நிறை வேற்று அதிகாரமுள்ள சிறிலங்காவின் அரசுத்தலைவரைத் தேர்;வு செய்யும் இத்தேர்தலையும் தேர்தல் முறைமையையும் பயன்படுத்தி ஈழத்தமிழர்கள் பொதுவேட்பாளரைத் தேர்தலில் போட்டியிட வைத்தும் தேர்தலில் வாக்களிக்காது புறக்கணித்;தும் இருமுனை சனநாயகப் போராட்டங்களை நடத்தியது குறித்து  நச்சோ சன்செஸ் ஆமர்  ஒரு வார்த்தை கூட கூறாது விட்டமை ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கசார்பான செயற்பாடாக உள்ளது.

அத்துடன் திட்டமிட்ட முறையில் சிறிலங்கா வின் உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்து ஈழத்தமிழர்களின் இறைமையையும் தன்னாட்சி உரிமை யையும் மறுக்கின்ற அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான செயலாகவும் அமைகிறது. இத்தகைய செயல்களால்தான் ஈழத்தமிழர்கள் உள்ளக தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்ட நிலையில் சிறிலங்காவால் இனஅழிப்பு அரசியலுக்கு உள்ளாகின்றார்கள் என்பதும் அவர்களது வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் உலகநாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் தங்களது கடமைகளைச் செய்து ஈழத்தமிழர்களுக்கு ஏற்புடைய தீர்வுகளுக்கு நெறிப்படுத்துவதைச் சிறிலங்கா தனது இறைமையில் தலையீடு என ஈழத்தமிழர்களுக் கான மனித உரிமைகள் பாதுகாப்பையோ நல்லாட்சியையோ ஈழத்தமிழர்களை இனஅழிப்பு செய்யும் தனது அரசியல் கொள்கை கோட்பாடு களுக்கான பொறுப்புக்கூறலையோ செய்ய மறுக்கிறது என்பதும் கவலைக்குரிய விடயமாக வுள்ளது.

மேலும் 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின இனஅழிப்பு மூலம் 176000 ஈழத்தமிழரைத் தேசமாகவே இனப்படுகொலை செய்து அவர்களின் 31 ஆண்டுகால நடைமுறையரசைப் படைபல ஆக்கிரமிக்கும், படைபல நிர்வாகத்திற்கும் உள்ளாக்கி அனைத்துலகச் சட்டங்களுக்கு எதி ராக இனங்காணக்கூடிய அச்சத்தின் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் பணிவைப் பெற்று இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையே இல்லை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் தமிழர்களைக் கண்ணிய மாக நடந்தும்படி கேட்டமைக்கு பதிலளித்த சிறிலங்கா அதே பாணியில் இன்றும் இலங்கை யில் சிங்கள பௌத்த இனமத பேதங்கள் இல்லையென நடைமுறை உண்மைகளைத் திரிபுவாதம் செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக்குழுவும் துணை செய்து இந்தத் தேர்தலில் இனமத பிரிவினைகள் ஏற்படுத்தக் கூடிய எதுவும் பேசப்படவில்லை என அறிக்கை விடுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மைகளைக் கண்டறியும் அக்கறையற்ற தன்மைக்கு உதாரணமாகி இந்த ஐரோப்பிய சிறிலங்காவுக்கான தேர்தல் கண்காணிப்புக் கழு என்பதே அதன் கடமையிலும் பொறுப்பிலும் தவறும் செயலாகிறது.

எனவே ஐரோப்பிய ஒன்றிய சிறிலங்கா வுக்கான தேர்தல் கண்காணிப்புக்குழுத் தலைவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் நச்சோ சன்செஸ் ஆமர் நடுநிலையான மீள அற்க்கையொன்றை வெளியிட ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களும் ஐரோப்பாக் கண்டத்திலும் உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களும் தங்கள் தங்கள் நாட்டு மக்களை யும் அரசாங்கங்களையும் வலியுறுத்த வேண்டு மென்பது இலக்கின் வேண்டுகோளாக உள்ளது.