உக்ரைன் போரை நிறுத்தி பேச்சுக்களை முன்னெடுப் பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஸ்ய அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் பேச்சுக்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரஸ்யாவின் எரிவாயுவை மீண்டும் வழங்குவது குறித்து பேசப்பட்டதாக த ரொய்டர் செய்தி நிறுவனம் கடந்த வியாழக் கிழமை(8) தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர் ஆரம்பமாகிய பின்னர் 2022 ஆம் ஆண்டில் இருந்து ரஸ்யாவில் எரிபொருட் களை வாங்குவதை ஐரோப்பிய ஒன்றியம் படிப்படியாக குறைத்து வந்திருந்தது. ரஸ்யாவின் நோட் றீம் எனப்படும் எரிவாயுக் குழாய்களை தகர்த்த பின்னர் ஐரோப்பாவுக்கான ரஸ்யாவின் 40 விகித எரிபொருள் விநியோகம் 19 வீதமாக வீழ்ச்சி கண்டிருந்தது. அதுவும் துருக்கி வழியாகவே விநியோகம் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்க நிறுவனங்கள் ரஸ்யாவின் மிகப்பெரும் எரி பொருள் விநியோக நிறுவனமான காஸ் பொரம் என்ற நிறுவனத்துடன் இணைந்து புதிய எரிபொருள் குழாய்களை அமைக்க திட்ட மிட்டுள்ளதுடன், ரஸ்யாவின் எரிபொருட்களை வாங்கி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விற்பனை செய்யவும் முன்வந்துள்ளன.
ஆனால் அது நடைபெறுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வன் டெர் லெயன் தெரிவித்துள்ளார். ஆனால் தாம் மீண்டும் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், சில ஐரோப்பிய நாடுகள் தற்போதும் எரிபொருட்களை தொடர்ந்து வாங்கி வருவதாகவும் ரஸ்யாவின் நாடாளுமன்ற பேச்சாளர் டிமிற்றி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சைபீரியா எரிவாயு குழாய் திட்டத்தை விரைவில் நிறைவு செய்வது தொடர்பில் சீனாவும், ரஸ்யாவும் பேச்சுக்களை நடத்தியுள்ளன. அதன் மூலம் சீனாவுக்கு 50 பில்லியன் கியூபின் மீற்றர் எரிவாயுக்களை ரஸ்யா வழங்க முடியும்.