ஐந்து மாத அநுர அலையை அடியோடு சாய்த்த தமிழ்த்தேசியம்..!-பா. அரியநேத்திரன்

கடந்த 2025, மே,06,ல் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தல் இலங்கை முழுவதுக்குமான  முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி – 4,503,930 வாக்குகள், 3927 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி – 2,258,480 வாக்குகள், 1,767 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 954,517 வாக்குகள், 742 உறுப்பினர்கள்ஐக்கிய தேசியக் கட்சி – 488,406 வாக்குகள், 381 உறுப்பினர்கள் இலங்கை தமிழ் அரசு கட்சி – 307,657 வாக்குகள், 377 உறுப்பினர்கள்  பொதுஜன முன்னணி – 387,098 வாக்குகள், 300 உறுப்பினர்கள் சர்வஜன அதிகாரம் – 294,681 வாக்குகள், 226 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 139,858 வாக்குகள், 116  உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு – 89,177 வாக்குகள், 106 உறுப்பினர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 75,268  வாக்குகள், 60 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 71,655 வாக்குகள் 54 உறுப்பினர்கள் அகில இலங்கை தமிழ் காங்கரஸ் – 70, 944 வாக்குகள் 101 உறுப்பினர்கள் மக்கள் போராட்ட முன்னணி  – 50,492 வாக்குகள் 16  உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் –    39,791 வாக்குகள்  37 உறுப்பினர்கள் தேசிய சுதந்திர முன்னணி – 39,443 வாக்குகள் 26 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு –  33,921 வாக்குகள்  30 உறுப்பினர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 21, 656 வாக்குகள் 35 உறுப்பினர்கள் இலங்கை தொழிலாளர் கட்சி –  19,635 வாக்குகள் 26 உறுப்பினர்கள் சுயேட்சைக் குழு 1 –  19,455 வாக்குகள் 8 உறுப்பினர்கள் தேசிய காங்கிரஸ் – 18,816 வாக்குகள்  22 உறுப்பினர்கள்.
ஜனாதிபதி தேர்தலில் திசைகாட்டி 56 இலட்சத்து 34ஆயிரத்து 915 (42.31 வீதம்)  வாக்குகளை பெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் 68 இலட்சத்து 63ஆயிரத்து 186 (61.56 வீதம்)ஆக உயர்ந்தது.
உள்ளூராட்சி தேர்தலில் 45 இலட்சத்து 03ஆயிரத்து 930  ( 43.26 வீதம்) ஆக குறைந்தது. அதாவது 23 இலட்சத்து 59 ஆயிரத்து 256 (18.03 சத வீதம்) வீழ்ச்சியை திசை காட்டி சந்தித்துள்ளது. இவை ஒட்டுமொத்த இலங்கையில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆசனங்களும்.
வடகிழக்கில் இந்த தேர்தல் முடிவு எவ்வாறு அமையும் என்பதை இலங்கையில் உள்ளவர்கள் மட்டுமல்ல உலகத்தமிழர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அதற்கான காரணம் ஐந்து மாதங்களுக்கு முன்னர் 2024, நவம்பர்,14, ல் இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 159, ஆசனங்களை பெற்று ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தி வடகிழக்கு தமிழ் மாவட்டங்களிலும், குறிப்பாக யாழ்மாவட்டத்தில் முதன் நிலையை பெற்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும், வடகிழக்கு முழுவதும் ஏழு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவாகி தாமே வடகிழக்கில் இனி முழுமையான ஆட்சி செய்ய தமிழ் மக்கள் அங்கீகாரம் தந்துள்ளனர் என்ற ஒரு மாஜையை தோற்றுவித்து தமிழ்மக்களுக்கு இனி எந்த பிரச்சினைகளும் இல்லை ஒரே நாடு ஒரே தீர்வு என்ற விதமான பரப்புரைகள் முன்எடுக்கப்பட்டன.
இது தமிழ்தேசிய அரசியலுக்கும், தமிழ் தேசிய கொள்கைக்கும் பாரிய பின்னடைவு களை எதிர்காலத்தில் ஏற்பட கூடிய அபாயம் உள்ளது என்பதை தெளிவுபடுத்தும் ஒரு தேர்தல் பிரசார பரப்புரையாக வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ்தேசிய கட்சிகளும் ஊர் ஊராய் பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியை மட்டும் உதாரணத்திற்காக எடுத்தால் வடக்குகிழக்கில் வாக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலை விட 50,844  வாக்குகள் தமிழரசுக்கட்சிக்கு மட்டும் அதிகரித்துள்ளதை காணலாம். உள்ளூ ராட்சி தேர்தலில் 3,07,657 வாக்குகள் (2.96 வீதம்) நாடாளுமன்ற தேர்தலில் 2,57,813( 2.31 வீதம்) ஆனால் 2024 ல் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கு 96975, வாக்குகள் கிடைத்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்ற மாவட்டம் இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் 91818, வாக்கு களை பெற்றது. இதன்படி 5157, வாக்குகள் மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி இழந்துள்ளதை காணலாம்.
ஒட்டுமொத்தமாக வடகிழக்கில் இரண்டே இரண்டு பிரதேச சபைகள் மாத்திரமே அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க கூடியதாக வேட்பாளர்கள் தமிழரசுக்கட்சியில் ஆசனங்களை பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபையில் 20, வட்டாரங்களும் தமிழரசு கட்சி கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது. இதற் கான முழுக்காரணமும் முயற்சியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனையே சாரும்.
இதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபை தமிழரசுக்கட்சி 10, வட்டாரங்களையும் கைப்பற்றி தனித்து ஆட்சியமைத்துள்ளது. இதற்கான முழுக்காரணம் மட்டக்களப்பு மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனையேசாரும். அவருடைய பிரதேச சபை என்பதும் இதுவாகும்.
இந்த இரண்டு தமிழ் பிரதேச சபைகளை விட வடகிழக்கில் வேறு எந்த பிரதேச சபைகளும் எந்த தமிழ்த்தேசிய கட்சிகளும் ஆட்சியமைக்க முடியவில்லை வேறு கட்சிகளின் ஆதரவுடன்தான் ஆட்சியமைக்க முடியும். அநேகமான தமிழ் பிரதேச சபைகளில் தமிழ்தேசிய கட்சிகள் இவ்வாறு ஆட்சி அமைக்கலாம் என்பதே உண்மை.ஆனால் மட்டக்களப்பில் முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் காத்தான்குடி நகரசபை ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஷ்புல்லாவின் தனிச்செல்வாக்கால் 10, வட்டாரங்களையும் கைப்பற்றி தனித்து ஆட்சிய மைத்துள்ளமை குறிப்பிடலாம்.
இறுதியாக 2018, இடம்பெற்ற உள்ளுராட்சி சபைகளுடன் 2025, உள்ளூராட்சி சபைகளின் ஆசனங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் 2018, ல் தமிழ்தேசிய கூட்டமைப்பாக தமிழரசுக்கட்சி போட்டியிட்டு மொத்த வடகிழக்கில் மொத்தமாக 417, உறுப்பினர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மட்டும் கிடைத்தனர். 3,37877 வாக்குகள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு கட்சிகளுக்குக்
கிடைத்தன.
2025, உள்ளூராட்சி சபைத்தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிட்டு   3,07,657 வாக்குகளை பெற்று 377, ஆசனங்களை பெற்ற்று இலங்கையில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
இதைவிட ஏனைய தமிழ் தேசிய கட்சிகளும் கணிசமான ஆசனங்கள் பரவலாக வடகிழக்கில் தமிழ்தேசியத்தின் வெற்றியை உறுதி செய்துள் ளதை காணலாம்.