ஏழை நாடுகளில் தடுப்பூசி போடும் பணி சமநிலையாக இல்லை -WHO

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளில் தடுப்பூசி போடும் பணி சமநிலையாக இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அனைவருக்கும் கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியைக்  கிடைக்கச் செய்தால் மாத்திரமே தொற்றின் பாதிப்பை முழுமையாக ஒழிக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom )தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பணக்கார நாடுகளில் தடுப்பூசி போடும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளில் தடுப்பூசி போடும் பணி சமநிலையாக இல்லை.

அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்காவிட்டால் பொருளாதாரத்தில் மீண்டும் பின்னடைவை சந்திக்க நேரிடும்”  என்றார்.