Tamil News
Home செய்திகள் எரித்திரியா சிறீலங்கா வசம் – மகிழ்சியில் கொழும்பு

எரித்திரியா சிறீலங்கா வசம் – மகிழ்சியில் கொழும்பு

முன்னர் விடுதலைப்புலிகளின் தளமாக விளங்கிய எரித்திரியா ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது தமக்கு கிடைத்த வெற்றி என சிறீலங்கா அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தூதுவர் சந்திரபிரேமாவின் கடுமையான உழைப்பினால் இது நிகழந்துள்ளது. விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களின் ஆயுத விநியோகத்தின் இடைத்தங்கல் முகாமாக எரித்திரியாவே விளங்கியது.

அதன் பின்னர் எரித்திரியாவுக்கான தூதுவரான சிறீலங்காவின் முன்னாள் படைத்துறை புலனாய்வு அதிகாரியான மேஜர் ஜெனரல் அமால் கருனசேகராவையும் எரித்திரியா ஏற்க மறுத்திருந்தது. எனினும் தற்போது சிறீலங்காவின் இராஜதந்திர முயற்சியால் எரித்திரியா சிறீலங்கா வசம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் எரித்திரியா அரசுக்குமிடையில் முன்னர் நெருக்கமான உறவுகள் இருந்தபோதும், அது தற்போது பாதிப்புக்களை சந்தித்துள்ளதையே தற்போதைய நிகழ்வுகள் காட்டுவதாக தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் இலக்கு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.

Exit mobile version