என்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம்: சந்திரிகா குமாரதுங்க

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரட்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளில்  தான் மாத்திரம் கொலைமுயற்சியை எதிர்கொண்டவர் என்ற போதிலும் ஏன் ஏனைய ஜனாதிபதிகளிற்கு 100 முதல் 240 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்கியுள்ளீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைப்புலிகளால் தான் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல்களை தான் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளிற்கு பாதுகாப்பை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.