‘எனது குடும்பத்தில் பாதிப் பேரை இழந்துவிட்டேன்’: அவுஸ்திரேலிய பிரதமரிடம் கண்ணீர் விட்ட அகதி

கேமரூன் நாட்டில் உள்ள தனது குடும்பத்திற்கும் ஆப்பிரிக்க தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு உதவுமாறு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனிடம் கண்ணீர் மல்க அகதியான பெண் ஒருவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

“எனது குடும்பத்தில் பாதிப் பேரை இழந்துவிட்டேன். நீங்கள் எனக்கு உதவவில்லை என்றால் எனது குடும்பத்தில் எவரும் எஞ்சி இருக்கமாட்டார்கள். அனைவரும் இறந்துவிடுவார்கள். தயவு செய்து எனக்கு உதவுங்கள்,” என அப்பெண் அவுஸ்திரேலிய பிரதமரிடம் மன்றாடியிருக்கிறார்.