எந்த சமூகவலைத்தளமும் பாதுகாப்பானது அல்ல – ரஸ்யா

குறுந்தகவல்களை அனுப்பும் சமூகவலைத்தள தொலைபேசி மென்பொருட்களை ரஸ்யாவின் முக்கிய அரச அதி காரிகள் பயன்படுத்துவதில்லை, ஏனெனில் எந்த சமூகலைத்தளமும் பாதுகாப்பானது அல்ல. அவை கண்காணிக்கப்படுகின்றன. ரஸ்ய அதிகாரிகள் ரஸ்யாவினால் வடிவமைக்கப்படும் மென் பொருட்களையே பயன்படுத்துவதுண்டு என ரஸ்யாவின்  அரச தரப்பு பேச்சாளர் டிமிற்றி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவினால் வடிவமைக் கப்பட்ட மென்பொருட்களைத் தவிர எந்தவொரு மென்பொருட் களையும் ரஸ்யாவின் அரச தலைவர்  பணிமனை பணியாளர்கள் பயன் படுத்துவதில்லை.

ரெலிகிராம் சமுகவலைத்தளம் கூட பாதுகாப்பானது என நாம் கருதவில்லை என ரெலி

கிராம் சமூகவலைத்தளத்தின் பிரதம அதிகாரியும், நிறுவுனருமானபாவல் டுரோவ் பிரான்ஸ் அரசினால் கைது செய்யப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது பெஸ்கோவ் கடந்த செவ்வாய்க்கிழமை(27)தெரிவித்துள்ளார்.

அசர்பைஜானில் இருந்து பிரான்ஸிற்கு தனது தனிப்பட்ட விமானத்தில் சென்ற சமயம் கடந்த சனிக்கிழமை(24) டுரோவ் பிரான்ஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் மீது சிறுவர் துஸ்பிரயோகம், போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியமை போன்ற குற்றச் சாட்டுக்களை பிரான்ஸ் அரசு முன்வைத்துள்ளது.

இதனிடையே, ரெலிகிராம் சமூகவலைத்தளத்தில் இருந்து தகவல்களை மேற்குலக நாடுகள் பெறமுடியாமையே இந்த கைதுக்கான உண் மையான காரணம் என ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாரோவ் தெரிவித்துள்ளார்.

தகவல்களை பெற்று அதன் மூலம் ஏனைய நாடுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான மேற்குலகத்தின் முயற்சி இது. அடிப்படை பேச்சுரிமையை மீறும் செயல் இது எனவும், கைதின் பின்னியில் அமெரிக்கா உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.