எதிர்வரும் 8ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

321 Views

எதிர்வரும் 8ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவி சரோஜினி தெரிவித்தார்.

இன்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தாம் போராட ஆரம்பித்து எதிர்வரும் மார்ச் மாதம் 8ம் திகதி மூன்று வருடத்தை நிறைவு செய்யவுள்ளனர். நாம் தொடர்ந்து போராடி கொண்டு இருக்கின்ற நிலையில் எமது போராட்டத்திற்கு எந்த வித தீர்வும் வராத எட்டப்படாத நிலையில் எங்களுடைய உறவுகளை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு செல்வபுரம் மில்லடியில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

இதில் அரச அரசசார்பற்ற நிறுவனங்கள், அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply