கப்பல்  தீ விபத்து – பாதிக்கப்பட்ட பகுதி மீள 20 வருடங்கள் ஆகும்

173 Views

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீள 20 வருடங்கள் ஆகலாம் என்று கடற்பிராந்தியப் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர எச்சரித்துள்ளார்.

மேலும் குறித்த கப்பலின் தீ முழுமையாக அணைக்கப்பட்டு, அதனை ஆழ்கடலுக்கு கொண்டு சென்றாலும் அதனாலேற்பட்ட பாதிப்புக்களிலிருந்து கடற்பிராந்தியம் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு சுமார் 20 வருடங்கள் ஆகலாம் என்றார்

அத்தோடு இந்த கப்பலால் சூழலியல் பாதிப்புக்கள் ஒரு பக்கம் இருக்க, அது ஏற்படுத்திய தீ பரவலும் அதனைத் தொடர்ந்து சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும் பல்வேறு சமூகப்பிரச்சனைகளைத் தோற்றுவித்துள்ளது என்றும் ஏற்கனவே பாதிப்பக்களை சந்தித்து வரும் மீனவ சமூகம் மேலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply