எகிறிச் செல்லும் கொரோனா! யாழில் 67 பேர் உட்பட வடக்கில் 82 பேருக்கு தொற்று

யாழ்ப்பாணத்தின் ஆய்வு கூடங்களில் நேற்று இரவும் பகலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் வடக்கு மாகாணத்தில் 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 67 பேர் யாழ். மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றிரவு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவில் 11 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வந்த ஒருவரும், தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த 4 பேருமாக ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோன்று, தெல்லிப்பழை வைத்தியசாலையில் 3 பேரும், பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒருவருமாக யாழ். மாவட்டத்தில் 10 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். அத்துடன், முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றாளராக இனங்காணப்பட்டார்.

இதேவேளை, நேற்று பகல் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 40 பேரும், யாழ். பல்கலைக்கழகஆய்வுகூடத்தில் 31 பேருமாக 71 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். இதில், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும்தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

இதேபோல, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 8 பேர், யாழ். போதனா வைத்தியசாலையில் 7 பேர், சாவகச்சேரி மருத்துவமனையில் 3 பேர், கோப்பாய், அச்சுவேலி மருத்துவனைகளில் தலா ஒருவர் என தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதேபோல, யாழ். சிறைச்சாலையில் 7 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

தவிர, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மருத்துமனையில் 5 பேரும், முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் ஒருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். கிளிநொச்சியில், பொது மருத்துவமனையில் இருவரும் தருமபுரம் வைத்தியசாலையில் ஒருவருமாக மூவரும், வவுனியா பொது மருத்துவமனையில் நால்வரும் நேற்று தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.