ஊழல் தொடா்பான வழக்குகளை வழசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்க வேண்டும் – மனோ கணேசன் வலியுறுத்தல்

மிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நாட்டில் ஊழல் தொடர்பான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதை ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மனோ கணேசன் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்ட பதிவில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை வரவேற்றுள்ளதோடு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அதிக ஆதாரங்கள் வழங்கி தேக்கநிலையை நீக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகளை மீண்டும் திறந்து, இம்மாத இறுதியிலும் பெப்ரவரியிலும் வழக்குகளை தாக்கல் செய்ய ஜனாதிபதி மேற்கொண்ட அறிவிப்பை வரவேற்றுள்ளார். மனோ கணேசன் மேலும் கூறுகையில், “ஊழல் தொடர்பான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதன் மூலம் வழக்குகள் தினசரி அடிப்படையில் விசாரிக்கப்படலாம் மற்றும் விரைவில் தீர்வுக்குக் கொண்டு செல்லலாம்,” என்றும் தெரிவித்தாா். இதேவேளை, இலஞ்ச ஆணைக்குழுவின் சட்ட அதிகாரங்களை வலுப்படுத்துவது ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் முக்கியக் கட்டமாக இருக்கும் எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.