Tamil News
Home செய்திகள் ஊடகவியலாளர்களின்‌ பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம். வீடியோ இணைப்பு

ஊடகவியலாளர்களின்‌ பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம். வீடியோ இணைப்பு

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள்
தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரியும் ஊடகவியலாளர்களின்‌ பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1073 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மதியம் 1.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும், ஒடுக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம் இராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் என்றவாறாக எழுதப்பட்டிருந்த பதாகையை தாங்கியவாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கும் போது, மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமையை கண்டித்து பத்திரிகையாளர்களின் ஒருபங்கு ஜனநாயகத்தை வளப்படுத்துவது, ஊடகவியலாளர்கள் நிகழ்வுகள் மற்றும் பிரச்சினைகள், அவை தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை பற்றி பொதுமக்களுக்கு கற்பிக்கின்றது . பத்திரிகையின் செயல்பாடுகள் தகவல், கல்வி மற்றும் வழிகாட்டல். பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும். ஒடுக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம் இராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் என தெரிவித்திருந்தனர்.

போராட்டக்காரர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடையதும் பிரித்தானியாவின் உடையதும் கொடிகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Exit mobile version