Tamil News
Home ஆய்வுகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: அரசியலின் அடிமூலம் – துரைசாமி நடராஜா

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: அரசியலின் அடிமூலம் – துரைசாமி நடராஜா

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கள் விரைவில் இடம்பெறவுள்ளன. இதற் கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே இம் முறை தேர்தலில் மலையகப் பகுதிகளில் இருந்து அதிகளவு பெண்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்று சிவில் அமைப்புகள் கோஷமெழுப்பி வருகின்றன. பெண்களின் பங்களிப்பானது நாட்டில் ஊழல்களை ஒழிப்பதற்கு வலுச்சேர்ப்ப தோடு முன்னேற்றகரமான மாற்றத்துக்கும் உந்துசக்தியாக அமையும் என்றும் மேலும் இவ் வமைப்புகள் வலியுறுத்துகின்றன.
இலங்கையின் உள்ளூராட்சி முறைமை மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. உள்ளூர் மட்டத்தில் பொதுமக்களின் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டுச் சேவைகள், பொதுத்தெருக்கள், மக்கள் நலன்புரி வசதிகள், பொழுதுபோக்கு என்பவற்றை நிர்வகித்து பராமரிப்பதற்காக காலனித்துவ ஆட்சிக்கு முன்னதாகவே இலங்கையில் சுயாதீன உள்ளூராட்சி முறைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தமையை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. என்றபோதும் கட்டமைப்பு க்கு உட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டதாக புத்திஜீவிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இலங்கையின் வரலாற்று நூலான மகாவம் சம் பழைய உள்ளூராட்சி நிர்வாகம் ‘நகர குத்திக’ (Nagara Guttika) என்று அழைக்கப்படும் நகரத் தலைவரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடுகின்றது. இதேவேளை கிறிஸ்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ் துவுக்கு முன் முதலாம் நூற்றாண்டு வரையுள்ள கல்வெட்டுகளை சான்றாகக் கொண்டு நாடெங் கும் கம்சபாக்கள் (கிராம சபைகள்) ஏற்படுத்தப் பட்டிருந்ததாகவும் அறியக் கூடியதாக உள்ளது. எனவே கிராமசபை முறையானது புராதன உள்ளூராட்சி முறையாக கருதப்படுகிறது.
இம்முறையின் கீழ் உள்ளூர் விவகாரங்களான பிணக்கு தீர்த்தல், கலாசார நிகழ்ச்சிகள், குடிநீர் வழங்கல், கழிவகற்றல், சுகாதாரம் பேணல், இயற்கை வள முகாமைத்துவம் போன்ற பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக இவை கிராம நிர்வாகம் தொடர்பில் ஓரளவு அதிகாரம் கொண்ட கிராமத்தலைவர்களின் கீழ் செயற்பட்டன. அத்தோடு சிறிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாளவும், தகராறுகளைத் தீர்க்கவும் இவை உரிமை பெற்றிருந்ததாக பெரேரா மற்றும் குணவர்தன போன்ற ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
வரவு செலவுக்கான அதிகாரம் 1931 ம் ஆண்டில் ஆட்சிமுறைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது உள்ளூ ராட்சி முறைமையிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு பொறுப்பாக அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட்டார். 1945 ம் ஆண்டு 43 ம் இலக்க உள்ளூராட்சி சேவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி சேவை ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. 1946 ம் ஆண்டு உள்ளூராட்சி திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது. உள்ளூராட்சி அதிகார சபைகளின் சேவை வழங் கும் பரப்பை விஸ்தரித்தல், வழிப்படுத்தல் மற்றும் அதன் சேவைகளை கண்காணித்தல் என் பன திணைக்களத்தின் பிரதான நோக்கங்க ளாக அமைந்தன.
1948 ம் ஆண்டுக்கும் 1980 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு அதிகமான அதிகாரம் வழங்கப் பட்டதுடன், 1977 இல் இச்சபைகளுக் கான வரவு செலவு திட்டத்தினை அனுமதிக்கின்ற அதிகாரமும் உள்ளூராட்சி அதிகார சபையின் தலைவரிடம் வழங்கப்பட்டது. உள்ளூராட்சி அரசாங்கமுறைக் கட்டமைப்பில் நகரசபை மற்றும் மாநகரசபை போன்றன 1930ம் ஆண்டுக ளில் இருந்து தொடர்ந்தும் செயற் பாட்டில் இருப்பதுடன்,1987 ம் ஆண்டு புதிதாக பிரதேச சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இது மக்களால் நான்கு வருடத்துக்கு ஒரு முறை தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பி னர்களைக் கொண்ட, கிராமிய மக்களின் வாழ் வியலுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்ட ஒரு அமைப்பாகக் காணப்படுகின்றது.  இது வீதிப் புனரமைப்பு, புதிதாக பாதைகளை அமைத்தல், வீதிவிளக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், பொது சுகாதாரம்,பொது பயன்பாடு (குடிநீர், மின்சாரம், கழிவகற்றல்) ஆகிய பல சேவைகளை வழங்குகின்றது. அத்துடன் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி சேவைகள், கட்டுமான வேலைகள்,தொழில் உற்பத்தி, சமூக அபிவிருத்தி, மகப்பேற்று மற்றும் சிறுவர் நல சேவைகள் ஆகிய மேலும் பல பணிகளையும் மேற்கொள்ளுகின்றன.
மலையக பெருந்தோட்டத்துறைக்கு உள்ளூராட்சி அமைப்புக்களின் சேவைகளை விஸ்தரித்தல் முழுமையாக இடம் பெறாமையானது முக்கிய குறைபாடாக முன்வைக்கப் படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் சேவை களை சட்ட ரீதியாக பெருந்தோட்ட மக்கள் அனுபவிக்க முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். எனினும் அண்மைக்காலத்தில் இதில் சில முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற் பட்டதையும் இங்கு கூறியாதல் வேண்டும்.
இது ஒரு புறமிருக்க தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு உரிய சேவை
களை வழங்குவதில் இடர்பாடுகள் காணப் படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டு வருகின்றன. தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர்களும் அவர்களைச் சார்ந்துள்ள அரசியல் அமைப்புக்களும் தொழிற்சங்க மயப்படுத்தப் பட்டவையாக காணப்படுகின்றன. எனவே பெருந்தோட்ட மக்களை பிரதிநித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர்கள் தங்களைச் சார்ந்து ள்ள தொழிற்சங்கங்களின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு பிரதேச சபைகளின் வளங்களையும் அதிகாரங்களையும் பயன்படுத்து வதாக கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வரு கின்றன.
சமன் ஶ்ரீ ரத்னாயக்கஇதன் விளைவாக பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தித் தேவைகளை நிறைவேற்றுவதற் கும், உள்ளூராட்சி சபைகளில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையை சரிசெய்து அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்கும் ஏற்றவாறு உறுப்பினர்கள் செயற்படுவதில்லை. இவற்றோடு தொழிற் சங்க பேதங்கள் காரணமாக கூட்டுப் பொறுப்பு மற்றும் கூட்டு முயற்சி என்பனவும் இப்பிரதி நிதிகளிடையே இல்லாது போயுள்ளது.
இந்நிலையில் காலாவதியாகியுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடாத்துமாறு தொடர்ச்சியாகவே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. எனினும் இழுபறி நிலைமைகளே இவ்விடயத்தில் தொடர்ந்த வண்ணமாக இருந்தது. இதனிடையே சமகால தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடாத்தும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. தேர்தல் திணைக் களம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் பெரிதும் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். எவ்வாறெனினும் தேர்தல் தினம் குறித்த அறிவிப்பு எதிர்வரும் 20 ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியாகும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2025 ம் ஆண்டு 01 ம் இலக்க உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரகாரம் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதற்கு அமைவாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்களின் கட்டுப் பணம் வைப்பில் இடப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 17 ம் திகதி திங்கட்கிழமை முதல் 20 ம் திகதி வியாழக்கிழமை நண்பகல் வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கான அறிவிப்புக்கள் மற்றும் ஆலோச னைகள் சகல தேர்தல் தெரிவத்தாட்சி அலு வலர்களுக்கும், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளன.
336 பிரதேச சபைகளுக்கு தொகுதி அடிப்படையில் 4872 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இம்முறை தேர்தல் நடத்தப் படுகின்றது. 2024 ம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பின் பிரகாரம் 1 கோடியே 71 இலட்சத்து 40,354 பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். புதிய ஊழல் ஒழிப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக போட்டியிட உத்தேசித்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் வேட்பு மனு பத்திரங்களை சமர்ப்பிக்கும் போது தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். 2023 ம் ஆண்டு 3 ம் இலக்க தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனு நிறைவடைந்து ஓரிரு நாட்களில் தேர்தல் பிரச்சார செலவு குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார்.
பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுத் தாக்கலின்போது பெண் களுக்கான 25 சதவீத ஒதுக்கீடு மற்றும் இளைஞர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து விசேட கவனம் செலுத்தப்படுகின்றது. குறிப்பாக மலையகப் பெண்கள் சகல துறைகளிலும் பின்தங்கிய ஒரு நிலையிலேயே இருந்து வரு கின்றனர். அரசியல் ரீதியான பின்னடைவும் இதில் குறிப்பிடத்தக்கதாகும். நீண்ட காலமாக பாராளுமன்றத்தில் மலையக பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாதிருந்தது. இக்குறையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றுள்ள நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செல்வி மற்றும் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பிகா ஆகிய பெண் பிரதிநிதிகள் நீக்கி வைத்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மேலும் பல மலையகப் பெண்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் உள் நுழைவார்கள் என்ற நம்பிக்கைக் கீற்றும் இப்போது தென்படுகின்றது.
இலங்கையில் மாகாண சபை முறையானது 1987 ம் ஆண்டு இலங்கை – இந்திய உடன் படிக்கையின் ஊடாக  அறிமுகப்படுத்தப்பட்டது.
இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக மாகாண சபை முறை அமையும் என்று கருதப் பட்ட போதும் இதன் சாதக விளைவுகள் உரியவாறு கிடைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை யாகும். இதனிடையே மாகாண சபையிலும் கூட மலையக பெண்களின் பிரதிநிதித்துவம் இடம்பெறாத நிலையில் சரஸ்வதி, அனுஷியா சிவராஜா போன்ற ஓரிரு பெண் முகங்களையே அவதானிக்க முடிந்தது.
இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களில் மலையகப்  பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஓரளவு காண முடிந்தது. இதனிடையே இம் முறை தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் மென்மேலும் அதிகரிக்க வேண்டும் என்று சிவில் அமைப்புக்களும் புத்திஜீவிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இதனூடாக பெண்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வினை உரியவாறு துரிதமாக பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று நம்பப்படுகின்றது. மேலும் பெண்களின் அரசியல் பிரவேசம் அதிகரிக்கும்போது அல்லது பெண்கள் தலைமையேற்கும்போது தேசத்தில் சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை அண்மையில் இலங்கை யில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மலையகப் பகுதிகளில் அதிகமான சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கி இருந்தன. இதன் காரண மாக நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை போன்ற பல இடங்களில் வாக்குச் சிதறல்கள் இடம்பெற்றிருந்த நிலையில் சிறுபான் மையினரின் பிரதிநிதித்துவம் பறிபோவதற்கும் இது உந்துசக்தியானது.  இந்நிலைமை எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் இடம்பெறக்கூடிய அபாயகரமான நிலைமை மேலெழுந்துள்ளது. மலையக பகுதிகளில் அதி களவான சுயேச்சைக் குழுக்கள் இம்முறை களமிறங்கியுள்ளதாக தெரியவருகின்றது. இது எமது மக்களின் பிரதிநிதித்துவ பாதிப்பிற்கு வழிசமைப்பதாக அமையும் என்று ஆரூடம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. எனவே இது தொடர்பிலும் மிகவும் அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதோடு சமூகத்துக்கு சிறப்பான சேவையாற்றக் கூடியவர்களை பொது மக்கள் தேர்தலில் தெரிவு செய்து அரசியல் களத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மீள் எல்லை நிர்ணயம் இந்நிலையில் மலையகப் பகுதிகளில் எல்லை நிர்ணயத்தை புதுப்பிக்க வேண்டியதன் அவசி யத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தி இருக்கின்றார். ’சுதந்திரத்துக்குப் பின்னரான 1948 முதல் 1977 ம் ஆண்டு காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயத்தில் மலையகத் தமிழர்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை. இதுவே இன் றைய பிரச்சினைகள் பலவற்றுக்கும் முக்கிய காரணியாகவுள்ளது. ஆகவே எல்லை நிர்ணயம் திருத்தம் செய்யப்பட வேண்டும். இதற்கான தீர்மானங்களை அரசாங்கம் கொண்டு வர வேண்டும். மலையகத்தைத் தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் 250 முதல் 500 பேருக்கு ஒரு கிராம் சேவகர் பிரிவு காணப்படுகின்றது. ஆனால் மலையகப் பகுதிகளில் 8000 பேருக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு காணப்படுகின்றது’ என்று ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
இதனடிப்படையில் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் மலையகத்தில் திருத்தியமைக் கப்படுமிடத்து, தேர்தல்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்களிலும் மலையக மக்களுக்கு சாதக விளைவுகள் ஏற்படும்  என்பதையும் மறுப்பதற் கில்லை. தேசிய மக்கள் சக்தி அண்மையில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் என்பவற்றில் அதிகூடிய வாக்கு களைப் பெற்று அமோக வெற்றி ஈட்டியிருந்தது. இந்நிலையில் நாட்டு மக்களின், நாட்டின் அபிவிருத்தி கருதி வாக்குறுதிகள் பலவற்றையும் ஆட்சிபீடமேறுவதற்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி வழங்கி இருந்தது. எனினும் தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடமேறியுள்ள நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பெரிதும் இடர்படுவதாக எதிர்க்கட்சிகள் விசனம் தெரிவித்து வருகின்றன.
அரசாங்கத்தின் மிதமிஞ்சிய பொய் காரணமாக மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ள னர். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர் தலில் அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு பொருளாதாரக் கொள்கை என்பதொன்று கிடையாது. ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிர மசிங்கவின் பொருளாதாரக் கொள்கையை அனுர குமார கடுமையாக விமர்சித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வெளியேறுவதாகவும் குறிப்பிட்டார். ஆனால் தற்போது ரணிலின் பொருளாதாரக் கொள்கைகளை எவ்வித மாற்றமும் இல்லாமல் அமுல் படுத்துகின்றார். நாணய நிதியத்தில் தஞ்சமடைந்து புகழ் பாடுகின்றார் என்றும் எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்து கின்றன.
எவ்வாறெனினும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சிந்தித்து,கட்டுக்கோப்புடன் வாக்களித்து தமது பிரதிநித்துவத்தை அதி கரித்துக்கொள்ள முற்பட வேண்டும். அரசியல் உரிமை ஏனைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ள அடிப்படையாகும் என்பதை மறந்து விடக்கூடாது.
Exit mobile version