உள்ளூராட்சித் தேர்தல் 2025 ‘எமது ஊர் நம்மோடு’  வெறும் கோசமல்ல (பகுதி 1) – விதுரன்

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். அவ்வாறு ஒத்திவைக் கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில்  நடைபெறாத உள்ளூராட்சி மன்றங்களுக் கான தேர்தலுக்காக 94 கோடி ரூபா செலவழிக்கப் பட்டிருந்தது.
70 கோடி 10 இலட்சத்து 10 ஆயிரத்து 814 ரூபா தேர்தல் ஆணைக்குழுவின் பிரதான அலு வலகத்தினாலும், 24 கோடி 38 இலட்சத்து 72 ஆயிரத்து 978 ரூபா மற்றும் 38 சதம் மாவட்ட தேர்தல் அலுவலகங்களினாலும் செலவிடப்பட்டது.
18 கோடி 33 இலட்சத்து 55 ஆயிரத்து 377 ரூபா மற்றும் 50 சதம் அச்சிடல் பணிக்காகவும் கொள்வனவுகள் செலவுக்காக 15 கோடி 45 இலட்சத்து 67 ஆயிரத்து 934 ரூபா மற்றும் 98 சதமும் செலவிடப்பட்டது.
மாவட்ட தேர்தல் அலுவலகங்களினால் மேலதிக நேரம் மற்றும் விடுமுறை சம்பளம்; என்ற விடயத்திற்கே அதிக நிதி செலவளிக்கப் பட்டுள்ளது. இதற்காக 25 மாவட்டத் தேர் தல் அலுவலகங்களினால் 8 கோடி 86 இலட்சத்து 19 ஆயிரத்து 690 ரூபா 29 சதம் செலவழிக்கப் பட்டுள்ளது.
10 கோடி 63 இலட்சத்து 89 ஆயிரத்து 365 ரூபா மற்றும் 55 சதம் அரசாங்க அச்சகக்கூட்டுத்தாபனத்திற்கும், 2 கோடி 48 இலட்சத்து 67 ஆயிரத்து 478 ரூபா மற்றும் 31 சதம் பொலிஸ் திணைக்களத்திற்கும் தேர்தல் பணி களுக்காக தேர்தல் ஆணைக்குழுவினால் செல வழிக்கப்பட்டுள்ளது.
இதில் திறைசேரியினால் 57.681கோடி ரூபா நிதி எட்டுக்கட்டங்களாக அளிக்கப்பட்டுள்ள நிலையில் 67சதவீதமான நிதியானது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் ஒதுக்கப் பட்டிருக்கின்றது என்பது முக்கியமான விடயம்.
நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டிருந்த தருணத்தில் ‘ஆளும் தரப்புக்கு அரசியல் சூழல் பொருத்தமில்லை’ என்ற ஒரேயொரு காரணத்துக்காகவே அக்காலத்தில் தேர்தல் ‘நிதியில்லை’ என்று காரணங்கூறப்பட்டு கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
உள்ளூராட்சி மன்றங்கள் தானே, வரை யறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட சிறிய
தொரு நிர்வாகக் கட்டமைப்பை பெற்றுக் கொள்வதற்காக ஆளும் தரப்பு அதீத அக்கறை கொண்டிருந்ததா என்று கேட்கலாம். ஆம், உள்ளூராட்சி மன்றங்கள் சிறியதொரு நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டவை தான். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டவை தான். ஆனால் அந்த அதிகாரங்களும், கட்டமைப்புக்களும் அன்றாடம் மக்களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டவை. ஆகவே அவற்றின் ஆளுகையை இழப்பதென்பது அரசியல்கட்சிகளைப் பொறுத்தவரையில் தத் தமது கட்சிகளின் மக்கள் மட்ட செல்வாக்கு என்ற ‘அத்திவாரத்தினை’ ஆட்டிப்பார்ப்பதாகவே கருதப் படுகின்றது.
இவ்வாறிருக்கையில் 2023 உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பால் ஏற்பட்ட நிதி விரயத்துக்கான பொறுப்புக்கூறல், நிலுவையாக இருக்கையில், அந்த விடயத்தையும் ‘தேர்தல் பிரசார கருவியாக’ மாற்றிக்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், எதிர்வரும் மே 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான அறிவிப்பைச் செய்திருக்கின்றது தேர்தல்கள் திணைக்களம்.
28மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 272 பிரதேச சபைகள் உள்ளடங்கலாக 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. 4,872 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இந்த தேர்தல் நடாத்தப்படவுள்ளது.
இந்தத் தேர்தலானது 60சதவீதம் விகிதாசார முறையையும் 40சதவீதம் தொகுதி முறை யையும் கொண்ட கலப்புத் தேர்தல் முறையில் நடைபெறவுள்ளதோடு பெண்களின் வகிபாகம் 10சதவீதமாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். அதேபோன்று இளையோரை உள்வாங்க வேண்டியதும் இன்றியமையாதவொரு நிபந்தனையாகும்.
உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வாக்களிப் பதற்கு ஒரு கோடியே 72 இலட்சத்து 96 ஆயிரத்து 330 பேர் தகுதி பெற்றுள்ளதோடு, 2024ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்புக்கு அமைவாக 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட 107 அரசியல் கட்சிகள் மற்றும் 49 சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் உள்ளடங்கலாக 420 வேட்புமனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக் காக வேட்பாளர் ஒருவர் வாக்காளருக்கு 74ரூபா முதல் 160 ரூபாவுக்கும் இடைப்பட்ட தொகையே செலவிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு அமை வாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடக்கூடிய மிகக் குறைந்த தொகையான 74ரூபா மன்னார் உள்ளூராட்சிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்ச தொகையான 160ரூபா லுஹகல உள்ளூராட்சி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், உள்ளூராட்சிமன்றங்களுக் கான தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் முதற்கட்டமாகவும்  இரண்டாம் கட்டமாக ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் நடத்தப் படவுள்ளது.
மாறிய வழமைநடந்து முடிந்த தேர்தலின் பின்னர் நாட்டில் நீண்டகாலமாக கோலோச்சி வந்த அல்லது குறுகிய காலத்தில் தேசிய ரீதியில் தாக்கம் செலுத்திய பல அரசியல் கட்சிகள் மிக மோசமான பின்னடைவைக் கண்டிருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்குப்பலம் 56 இலட்சத்திலிருந்து 43 இலட்சமாக வீழ்ச்சி கண்டது. அதன் பின்னர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மேலும் பின்னடைவு கண்டு 19 இலட்சத்து 68 ஆயிரமாக வீழ்ச்சி கண்டது.
அவ்வாறே 2024 செப்டெம்பர் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி தலைமையிலான கூட்டணி 5,00,835 வாக்குகளையும் 2019 மற்றும் 2020 தேர்தல்களில் 69 இலட்சம் வாக்குப்பலத்தைப் பெற்றிருந்த பொதுஜன பெரமுன கட்சி, நாமல் ராஜபக்ஷ தலைமையில் 3,50,429 வாக்குகளைப் பெற்று பின்தள்ளப்பட்டது.
வடக்கில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 2,57,813 வாக்குகளையும் கிழக்கை பிரதானமாகக்கொண்டு தனித்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா காங்கிரஸ்  87,038 வாக்குகளையும் பெற்று பின்னடைவுகளைச் சந்திக்க நேரிட்டது.
எதிர்பாராதவிதமாக 2024 ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் பின்னர் பொதுத்தேர்தலிலும் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எழுச்சி கண்டதால் மரபு ரீதியாக செல்வாக்குப் பெற்றிருந்த கட்சிகள் வீழ்ச்சி காண அடிப்படைக் காரணமாக அமைந்ததெனலாம்.
2024 செப்டெம்பர் மாதம் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 68,63,186 வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. அக்கட்சி 2024 ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகள் 56,34,915 ஆகும். ஆனால், பொதுத் தேர்தலில் மேலும் 12 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
அவ்வாறு எழுச்சி அடைந்த தேசிய மக்கள் சக்தி ஆட்சிப்பொறுப்பைக் கையிலெடுத்து ஏழு மாதங்களுக்குப் பின்னர் ‘குட்டித் தேர்தலுக்கு’ தயாராகியுள்ளது. கடந்த ஏழு மாதங்களில் மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தும் எந்தவிதமான பாரிய மாற்றங்களும் நிகழ்ந்தேறவில்லை. இறுதியாக ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த ரணில் விக்கிரமசிங்க, ‘கிழித்த கோட்டில்’ பயணிக்கிறது அநுர தலைமையிலான அரசாங்கம். தற்போதிருக்கின்ற பொருளாதார சூழலுக்குள்ளும், பூகோள அரசியல் நிலைமைகளுக்கும் அநுர அரசாங்கத்துக்கு வேறு தெரிவுகள் இல்லை என்பது யதார்த்தம். அவ்விதமான சூழலில் அறிவிக்கப்பட்டி ருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமக்கு முழுமையான ஆதரவினை வழங்கி ‘ஒட்டுமொத்த ஆணையையும்’ அளிக்குமாறு அநுரவும் அவரது சகாக்களும் மக்களைக் பகிரங் கமாக கோரியிருக்கின்றார்கள். அதற்காக அவர்கள் பல்வேறு உத்திகளை பயன்படுத்துகின்றார்கள்.
மறுபக்கத்தில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜனபெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தமது வாக்கு வங்கிகளை மீட்டெடுத்துக்கொள்வதற்கான வியூகங்களுடன் களமிறங்கியுள்ளன. குறிப்பாக, அநுர அரசாங்கத்தின் ‘இயலாமையை’ அம் பலப்படுத்தியும் வரலாற்று நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தும் அரசியல் இலாபமீட்டுவது தான் எதிர்த்தரப்பினர் பொதுவான மூலோபாயமாக இருக்கின்றது.
தென்னிலங்கை முட்டிமோதல்கள் இப்படியிருக்கையில், தாயகத்தின் நிலைமைகளும், இன
விடுதலையை நோக்கி இருக்கும்  இனக்குழுமத்தின தும், அதன் பிரதிநிதிகளாகுவதற்கு முனைந்து கொண்டிருக்கும் அரசியல், சுயேட்சைக்குழுக் களினதும் சிந்தனைகளும், நிலைப்பாடுகளும் எப்படியிருக்க வேண்டும் என்பதையும், களச்சூழலில் நிலைமைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.  அதனை அடுத்தவாரம் பார்க்கலாம்…
தொடரும்…