Tamil News
Home செய்திகள் உலக நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்துக்கு வந்தது ஸ்ரீலங்கா! மகிழ்ச்சியான தகவல் வெளியானது

உலக நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்துக்கு வந்தது ஸ்ரீலங்கா! மகிழ்ச்சியான தகவல் வெளியானது

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி இலங்கை முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

உலக தாய்ப்பால் கொடுக்கும் போக்கு குறித்த ஆய்வு 120 நாடுகளில் நடத்தப்பட்டது.

இதன்படி, நாடுகள் 10 அளவுகோல்களில் தீர்மானிக்கப்படுகின்றன. பின்னர் வண்ண குறியீட்டு புள்ளிகள் அமைப்பு மூலம் தரவரிசைப்படுத்தப்படுகின்றன. அதன்படி, சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை என நாடுகள் ஏறுவரிசையில் பிரிக்கப்படுகின்றன.

உலக தாய்ப்பால் கொடுக்கும் போக்கு முயற்சியில் இந்த ஆண்டு இலங்கைக்கு பசுமை தரவரிசை கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பால் மா பாவனையினால் ஏற்படும் சுகாதார விளைவுகள் தொடர்பாக தேசிய வைத்தியசாலையில் நடைபெற்ற தெளிவுபடுத்தும் நிகழ்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.

குறித்த மதிப்பீட்டின் படி இலங்கை 100க்கு 91 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பாலை முறையாக வழங்குவதால் தொற்றுநோய்களை தடுக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version