உலக தற்கொலை தடுப்பு நாள்: யாழில் நடைபவனி

IMG 20240911 WA0120 உலக தற்கொலை தடுப்பு நாள்: யாழில் நடைபவனி

ஶ்ரீ லங்கா சுமித்ரயோ யாழ் கிளை ஏற்பாட்டில் உலக தற்கொலை தடுப்பு நாளை முன்னிட்டு இன்று (11) மாலை   தற்கொலை தடுப்பு சுலோகங்களை தாங்கியவாறு விழிப்புணர்வு நடைபவனி  முன்னெடுக்கப்பட்டது.

இந்நடைபவனி வீரசிங்கம் மண்டபத்தில் இருந்து கே.கே.எஸ் வீதி வழியாக சத்திரச் சந்தியை அடைந்து, அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ். பஸ் நிலைய முன்றலை சென்றடைந்து. பின்னர் அங்கு கவனயீர்பு போராட்டமும்  நடைபெற்றது.

உலகளவில் நாள் ஒன்றுக்கு 100 இறப்புக்களில் ஒன்று தற்கொலை எனக்கூறப்படுகின்றது. மேலும் 2024 – 2026ம் ஆண்டுக்கான உலக தற்கொலை தடுப்பு நாளின் கருப்பொருள் ”உரையாடலைத்தொடங்கு” என்ற அழைப்புடன் ‘தற்கொலை பற்றிய கதையை மாற்றுதல்’ ஆகும்.