Tamil News
Home செய்திகள் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவும் கொடிய கொரோனா வைரஸ், வுவானில் திறந்தவெளி சந்தையில் விற்கப்படும் பாம்புகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளனர்.

வுவான் நகரில் உள்ள கடல் உணவு சந்தை கொரோனா வைரஸ் உருவாக காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த சந்தை உள்ளூர் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஒட்டுண்ணி விலங்குகளை பாதிக்கும் விகாரங்களின் மரபணுக்களை ஆராய்ந்தபோது, கொரோனா வைரஸ் பாம்புகள் எளிதில் பாதிக்கப்படுவதை பீக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பாம்புகள் பின்னர் மனிதர்களுக்கு தொற்றுநோயைத் பரப்பும் வைரஸ் புள்ளியாக செயந்பட்டன.

மத்திய வுவானில் உள்ள ஹூவானன் கடல் உணவு சந்தையில் கோலாக்கள், எலிகள் மற்றும் ஓநாய் குட்டிகள் விற்கப்படுகின்றன..

இதற்கிடையில் வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க வுவான் நகரில் உள்ள யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், சீனாவின் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் வுவான் நகருக்கு வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மனிதர்களின் நுரையீரலை தாக்கி, மூச்சுத்திணறல் போன்ற நோய்களை உருவாக்கி, மரணத்தை ஏற்படுத்தக் கூடியது கொரோனா வைரஸ். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது.

சீனாவின் வுவான் நகரில் உருவாகி உள்ள இந்த வைரஸ், தற்போது சீனா மட்டுமன்றி அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் இதுவரை சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 550 இற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனாவைரஸ் பாதிப்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version