Tamil News
Home உலகச் செய்திகள் உலகிலேயே முதல் முறை: 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய சீனா

உலகிலேயே முதல் முறை: 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய சீனா

சீனாவில் 100கோடிக்கும் அதிகாமானோருக்கு கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு.

சீனாவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய பிறகு தடுப்பு மருந்து செலுத்தும் பணி மெதுவாக தொடங்கியது.

சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாகும் ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டு   தடுப்பு மருந்துகளை வழங்குவதை இலக்காக வைத்துள்ளனர் சீன அதிகாரிகள்.

இதுகுறித்து சினுவா செய்தி நிறுவனம் தரப்பில், ”உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 7  கொரோனா தடுப்பூசிகளுக்கு  சீனாஅனுமதி வழங்கியுள்ளது. இதில் இரண்டு  கொரோனா தடுப்பூசிகள் குழந்தைகளுக்குச் செலுத்தும் தகுதியுடையவை. இதன் காரணமாக கடந்த 5 நாட்களில் சீனாவில் 10 கோடி  கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும், முதல் முறையாக சீனாவில்தான் 100 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version