உலகிலேயே மிகப்பெரும் தொங்கும் பாலத்தைத் திறந்த போர்ச்சுகல்

உலகிலேயே மிகப்பெரிய தொங்கும் பாலமானது வடக்கு போர்ச்சுகலில் திறக்கப்பட்டுள்ளது.

வடக்கு போச்சுகளில் உள்ள அரோக்கா என்ற சிறிய நகரத்தில் பைவா என்ற நதி ஓடுகிறது. இந்த நதி குறுக்கே இந்த தொகும் பாலம் அமைந்துள்ளது. சுமார் 516 மீற்றர் நீளமும், ஆற்றிலிருந்து 175 மீற்றர் உயரத்திலும் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தில் மக்கள் நடப்பதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது இந்த பாலத்தில் அங்கிருக்கும் உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.