உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி- பிரித்தானியா ஊடகம்

சிறீலங்கா, இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பேசப்படும் தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் டெய்லிமெயில் பத்திரிகை கடந்த செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்துள்ளது.

கேள்வி பதில் பகுதியில் உலகில் தற்போதும் பேசப்படும் பழமையான மொழி தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு டி.பி சால் என்பவர் பிளக்பூல் பகுதியில் இருந்து இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி குறைந்தது 2,500 வருடங்களுக்கு முன்னைய மொழி என ஆதராங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய மக்களும் அதனை இலகுவாக பயன்படுத்தும் தன்மை கொண்ட மொழி.

உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழ் 18 ஆவது இடத்தில் உள்ளதாகவும், உலகில் 70 மில்லியன் மக்கள் அதனைப் பேசுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.