Tamil News
Home உலகச் செய்திகள் உலகளவில் 10 கோடியைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

உலகளவில் 10 கோடியைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில்  சீனாவில்  இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்,   இன்று   உலகளவில்  10.35 கோடிக்கும் அதிகமானவர்களைப் பாதித்துள்ளது.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.36 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள்      கொரோனா  தாக்கத்தால்  அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.66 கோடியை கடந்துள்ளது. மேலும் கொரோனா வைரசால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.50 இலட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்த பாதிப்பு 1,07,57,610ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் இது வரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,54,392 ஆக அதிகரித்துள்ளது.

அதே போல் பிரேசிலில் 9,204,731 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 224,534 பேர் உயிரிழந்துள்ளனர். 3,850,439 பேர் ரஷ்சியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இது வரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73,182 ஆக உள்ளது. மேலும் பிரித்தானியாவில் 3,817,176 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 106,158 பேர் மரணித்துள்ளனர்.

இந்நிலையில், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version