Tamil News
Home உலகச் செய்திகள் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் – ஐ.நா எச்சரிக்கை

உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் – ஐ.நா எச்சரிக்கை

உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும்  அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அண்டோனியா குத்தரேஸ் பேசும்போது, “ உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறினால் தீவிர  பசி  மற்றும் மரணத்தின் விளிம்பை அடைவார்கள்.

கொரோனா மற்றும்  கால நிலை மாற்றம் வறுமையை தீவிரப்படுத்தியுள்ளது. நீங்கள் மக்களுக்கு உணவளிக்கவில்லை என்றால் மோதலை உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம். பஞ்சமும், பசியும் உணவு இல்லாததால் ஏற்படவில்லை. அவை மனிதனால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றன” என்றார்.

Exit mobile version