யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உயிரிழந்த ஒன்பது உறவுகளையும் நினைவுகூரி அமைக்கப்பட்ட நினைவுத்தூபியின் முன் சி.வி.கே சிவஞானத்தினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டது.