மிகப்பொரும் விண்கற்களின் (asteroids) தாக்குதலில் இரு ந்து பூமியை காப்பாற்றுவதற்கு நவீன அணுவாயுதங்கள் தேவை அவற்றை நாம் விரைவாக தயாரிக்க வேண்டும் என சீனாவின் விண் வெளியின் ஆழமான பகுதிக்கான ஆய்வு (Deep space exploration program) என்ற நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் SCIENTIA SINICA Technologica என்ற விஞ்ஞான சஞ்சீகையில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
விண்ணில் இருந்து வரும் ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக வேண்டும். அவற்றை சரியாக கணித்து அழிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். வெவ்வேறு அளவுகள் கொண்ட விண்கற்கள், அவற்றின் வேகம், அவை பூமியை தாக்குவதை கண்டறிந்து வழங்கப்படும் எச்சரிக்கையின் கால எல்லை போன்ற காரணகிள் அங்கு கருத்தில் எடுக்கப் பட்டன.
எச்சரிக்கை கால எல்லை ஒரு வாரமாக இருப்பின் அதற்கு சிறந்த பாதுகாப்பு நடவடிக் கையாக அணுவாயுதமே இருக்கும். எனவே உலகளாவிய ரீதியில் நாடுகள் இணைந்து ஒரு அணுவாயுத பாதுகாப்பு பொறிமுறையை உரு வாக்க வேண்டும்.
விண்கற்களை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளும் வடிவமைக்கப்பட வேண்டும். அணுவாயுதங்களை விண்வெளியில் 10 ஆண்டுகளுக்கு மேல் நிலையாக வைத்திருக்கும் அல்லது சுழற்சியில் வைத்திருக்கும் பொறி முறைகளும் உருவாக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.