Home செய்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவு பெறுகின்றது.இந்த தாக்குதலி உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

IMG 0018 3 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு- ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் இலக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல்களில் 8 தற்கொலை குண்டுத்தாரிகள் உள்ளடங்களாக சுமார் 277 பேர் உயிரிழந்திருந்தனர்.

அத்துடன், இந்த தாக்குதல் சம்பவத்தில் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏப்ரல் 21அன்று பயங்கரவாதிகளினால் இலக்குவைக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இன்று காலை விசேட வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சீயோன் தேவாலயத்தின் மீதான தாக்குதலில் 31பேர் உயிரிழந்ததுடன் 80க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது

அதே போல் வவுனியா தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் ஆலய பரிபாலனசபையின் ஏற்பாட்டில்  உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா குட்செட்வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில்  நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மலையகத்திலும்  மௌன அஞ்சலி.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் பல்கலையில் அஞ்சலி நிகழ்வு

Exit mobile version