உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல்

177 Views

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாக  இருவர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

உயித்த ஞாயிறு தாக்குதலாளிகளின் பிரதான சூத்திரதாரிகளை கண்டறியுமாறு அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் இன்று மாலை கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது சிறையிலுள்ள மௌலவி. மொஹமட் இப்ராஹிம் முகமது நௌபர் மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவருமே பிரதான சூத்திரதாரிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை மறைக்க வேண்டிய தேவை எதுவும் அரசாங்கத்துக்கு இல்லை.

தேசிய தௌஹீத் ஜமாத் தலைவரான சஹ்ரான் ஹாசிமை மூளைச் சலவை செய்து தற்கொலை குண்டுதாரிகளின் தலைவராக இவா்தான் மாற்றியுள்ளார்.

2016 முதல் தாக்குதல் இடம்பெறும் வரை இந்தத் தீவிரவாதிகள் பல தடவை சஹ்ரானை சந்தித்தனர். லுக்மான் தலிப் அஹமட் இந்த சந்திப்புகளுக்கு உதவியுள்ளார்” என்றார்.

Leave a Reply